#BREAKING காலையிலேயே விஜய்க்கு பேரதிர்ச்சி... உளவுத்துறை கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... புதுச்சேரி ரோடு ஷோவில் திடீர் மாற்றம்...!
புதுச்சேரியில் வரும் 5ம் தேதி தவெக சார்பில் நடைபெறவிருந்த விஜய் ரோடு ஷோ ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருந்த 'ரோடு ஷோ' ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ரோடு ஷோ நடந்த அனுமதி கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து அனுமதி கோரினர். இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு கூட்டத்தின் போது புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தினால் அருகேயுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் குவிய வாய்ப்புள்ளதாக உளவுத்துறை சார்பில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் சம்பவம் போன்ற அசம்பாவிதம் புதுச்சேரியிலும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள 3 மைதானங்களைக் குறிப்பிட்டு அதில் வேண்டுமானால் பொதுக்கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தவெக நிர்வாகிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது தொடர்பாக தவெக தலைமை எந்த வித முடிவையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. ஏனெனில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி 3 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்து தவெக சார்பில் காவல்துறைக்கு மனு அளிக்க வேண்டும். அதனை காவல்துறை பரிசீலித்து மாற்று தேதி அல்லது இடத்தை தேர்வு செய்து தருவார்கள். அப்படி எந்த ஒரு மனுவும் இதுவரை தவெக தரப்பில் இருந்து புதுச்சேரி காவல்துறைக்கு அளிக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் வரும் 5ம் தேதி நடைபெறவிருந்த விஜயின் ரோடு ஷோ ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால்...?” - விஜயை விடாமல் சீண்டும் நயினார் நாகேந்திரன்...!
தமிழகத்தை போன்று பெரிய விரிவான சாலைகள் புதுச்சேரியில் கிடையாது. விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரையுள்ள பகுதி மக்கள் அதிக நடமாட்டம் காணக்கூடிய, நெரிசல் மிக்க பகுதி ஆகும். எனவே விஜய்யின் ரோடு ஷோவுக்கு புதுச்சேரி அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்..." தவெக தலைவர் விஜய்யை கைது பண்ணுங்க... கரூர் சிபிஐ அலுவலத்தில் த.கொ.இ.பே . சார்பில் புகார் மனு...!