×
 

#BREAKING: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

கரூர் கோரச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கரூரில் நடந்த துயரச் சம்பவம் போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளையும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனதை விசாரித்த நீதிபதி, வீடியோ காட்சிகளை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார். கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது என்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ன மாதிரியான கட்சி, அந்த இடத்தில் இருந்து அனைவரும் பறந்து விட்டனர் என வேதனை தெரிவித்தார் நீதிபதி.

இதையும் படிங்க: ச்ச… தவெக என்ன மாதிரியான கட்சி? சம்பவ இடத்திலிருந்து பறந்துட்டாங்க… நீதிபதி ஆவேசம்…!

இந்த நிலையில், கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழுவை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வழக்கை முடித்து வைத்தார். 

இதையும் படிங்க: கரூர் செல்ல தயார்? சிக்னல் கொடுத்த விஜய்… 20 பேர் கொண்ட குழு நியமனம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share