×
 

ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

ஆட்சிக் கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கியது. 

மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்தது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு பிரகாஷ், சாமியப்பன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share