ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் 110 விதி என் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நகரங்களில் சுகாதாரமான நகரங்களாக மாற்ற பாதுகாப்பான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மீஞ்சூரில் 4,800 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராகும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 500 கோடி ரூபாயில் ஆவடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கு வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். சென்னை உட்பட அனைத்து நகரப் பகுதிகளின் சாலைகளும் 1,850 கோடி ரூபாய் மதிப்பீடு சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.
கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 2400 கோடி ரூபாயில் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை மேம்படுத்த 236 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் 305 கோடி ரூபாயில் பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 335 கோடி ரூபாய் செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்திக்கு 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்திக்கு 291 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தளபதி தான் அடுத்த பிரதமர்..! ராகுலே அமர வைப்பார்.!! அடித்து கூறும் எம்எல்ஏ கனிமொழி..!