×
 

திமுக கைக்கூலின்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க! - தவெக நிர்வாகி அஜிதா கணவர் ஆக்னல் கண்ணீர்!  

தவெக நிர்வாகி அஜித்தா, தன்னை 'திமுக ஆதரவாளர்' எனச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக அவரது கணவர் ஆக்னல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜித்தா ஆக்னல், இன்று காலைத் தனது இல்லத்தில் 15 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக-வில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில், அஜித்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கட்சித் தலைவர் நடிகர் விஜய்யின் காரையும் அவர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக அஜித்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'திமுக-வின் கைக்கூலிகள்' என்றும், 'திமுக ஆதரவாளர்கள்' என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாகச் விமர்சிக்கப்பட்டனர். அஜித்தாவின் கணவர் ஆக்னல் இது குறித்துக் கூறுகையில், "என் மனைவி திமுக ஆதரவாளர் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். கடந்த மூன்று நாட்களாக அவர் உணவே அருந்தாமல் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த அவதூறுகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இன்று காலை இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்த அஜித்தாவை, அவரது குடும்பத்தினர் மீட்டுத் தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு, மாத்திரைகளின் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அஜித்தாவின் உடல்நிலை குறித்துப் பேசிய அவரது கணவர், இன்னும் 3 மணி நேரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார். இதற்கிடையில், மருத்துவமனை வளாகத்தில் அஜித்தாவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “திமுக அரசு மத்திய திட்டங்களை தடுக்கிறது!” - நயினார் நாகேந்திரன்  குற்றச்சாட்டு!

கட்சிப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் நடிகர் விஜய்யின் காரை முற்றுகையிட்டதாகக் கிளம்பிய சர்ச்சைகளுக்குப் பின், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: “அடிமை என்று சொல்பவர்கள் கண்ணாடியைப் பார்க்கட்டும்!” - முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share