×
 

"பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!

தவெக தலைவர் விஜய் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் பல ஆண்டுகளாக இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் உத்தியைப் பின்பற்றி வருகின்றன. இப்போது, புதிய அரசியல் அமைப்பாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய்யும் அதே பாதையில் செல்கிறார் என்பதை அவரது சமீபத்திய அறிவிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன. மார்ச் 7 அன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் பல்வேறு மகளிர் நலத் திட்டங்களை அறிவித்தார்.

இவை பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டவை என்பதால், தேர்தல் களத்தில் பெண் வாக்காளர்களை குறிவைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மற்ற திராவிட கட்சிகளை போலவே தான் விஜயும் இலவசங்களை அறிவித்திருக்கிறார் என்றும் மற்ற கட்சிகளுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தவெக கட்சி என்பது மற்ற ஒரு திராவிட கட்சிதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தனித்த கொள்கையோ, கோட்பாடோ இல்லாது, திராவிட கட்சிகள் சொல்லும் இலவசங்களை பின்பற்றுவது எல்லாம் கொடுமை என்று தெரிவித்தார். தாலிக்குத் தங்கம், இலவச வீடு, உரிமைத்தொகை என இலவசமாக சொல்லிக் கொண்டு போனால் தமிழ்நாடு ஒருநாள் ஏலத்திற்கு வந்துவிடும் என்று விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: வட சென்னையில் களமிறங்கும் விஜய்!! மீனவர்களை கவர திட்டம்! ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அப்டேட்!

பாண்டியராஜன் படத்தில் வருவது போல் கடைசியில், 'பிம்பிளிக்கி பிளாப்பி' என்று பிளாப் ஆகப் போகிறது தமிழ்நாடு என சீமான் கலாய்த்தார். விஜய்க்கு தனித்த தத்துவங்களோ, கோட்பாடோ கிடையாது என்று தெரிவித்துள்ள சீமான், சினிமா வேறு, சித்தாந்தம் வேறு என்று தெரிவித்தார். இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் விஜயின் இதுபோன்ற அறிவிப்புகளை தான் வெறுப்பதாகவும், அருவருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: உங்க உ.பி.க்களை வெச்சு விளம்பர அரிப்பை தீர்த்துக்கோங்க CM சார்... ஸ்கூல் பசங்க பாவம்... சாடிய TVK அருண்ராஜ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share