×
 
☰

கடனில் பொதுத் துறை.! படுகுழியில் தமிழ்நாடு.! பதில் சொல்லுங்க CM.! வேல்முருகன் கேள்வி.!

பொதுத் துறை நிறுவனங்கள் கடன் குறித்து வேல்முருகன் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான நிதி நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். பொதுத்துறைகளை கடனில் மூழ்கடித்து தமிழ்நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுவது யார் என்றும், முதலமைச்சர் இதற்கு பதில் சொல்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஒரு மக்கள் நலத் திட்டத்தை செயல்படுத்தும்போது, அதனால் சமூகத்திலும் அரசின் நிதிநிலையிலும் ஏற்படும் சாதக பாதகங்களை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யாமல் திட்டங்களை விரிவுபடுத்துவது, இறுதியில் அதன் சுமையை ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் சுமத்தும் நிலையை உருவாக்கிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.தமிழ்நாட்டின் மின்சாரத் துறையின் நிதிச்சுமை குறித்து தனது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார். உச்சநேர மின்தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ₹35 முதல் ₹37 வரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமையும் கவலைக்குரியதாக உள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கொள்கைக் குறிப்பின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் தினசரி வருவாய் ₹47.89 கோடியாகவும், தினசரி செலவு ₹70.15 கோடியாகவும் உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ₹22.26 கோடி பற்றாக்குறை நிலவுகிறது. 2025–26ஆம் ஆண்டில் மாத சராசரி இழப்பு ₹393.76 கோடியாக இருந்துள்ளது.

இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்..! அரசு வேலை தேடுவோருக்கு குட் நியூஸ்..! TANGEDCO-வில் காலியிடங்கள் நிரப்ப அனுமதி.!!

இந்த நிலையில், மகளிரின் கட்டணமில்லாப் பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ₹6,000 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.ஏற்கனவே மின்சாரத் துறையை கடனில் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள். இப்போது போக்குவரத்துத் துறையை கடனில் தள்ளுகிறீர்கள். விமர்சனம் செய்தால் சிறையில் தள்ளுகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் படுகுழியில் தள்ளுகிறீர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கே.என்.நேரு வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு.! தமிழக அரசு நடவடிக்கை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share