என்னாச்சு..? தவெக வேட்பாளர் அறிமுகம் திடீர் ஒத்திவைப்பு...! செக் வைத்த தேர்தல் ஆணையம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை இன்று விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் தவெக, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், கட்சித் தலைவர் விஜய் நேரடியாக வேட்பாளர்களை அறிவிப்பார் என்று கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தவெகவின் வேட்பாளர் தேர்வு செயல்முறை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் தானே நேர்காணல்களை நடத்தத் தொடங்கினார்.
முதல் கட்டத்தில் சுமார் 60 பேர் வரை நேர்காணல் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இரண்டாவது கட்ட நேர்காணல்களும் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நேர்காணல்களின் அடிப்படையில் முதல் 50 வேட்பாளர்கள் உள்ளிட்ட பட்டியலை விரைவில் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. சமீப நாட்களில் விஜய் கையில் வேட்பாளர் பட்டியல் இருப்பதாகவும், விரைவில் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று விஜய் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்தது தமிழக வெற்றிக் கழகம். மேலும், வரும் 29ஆம் தேதி அறிமுக கூட்டத்திற்கு அனுமதி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!