×
 

விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை மார்ச் 24, அன்று சென்னையில் கட்சித் தலைமையகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிக்கையில் மொத்தம் 297 வாக்குறுதிகள் 31 பிரிவுகளின் கீழ் இடம்பெற்றுள்ளன. மக்கள் நலன், பெண்கள் உரிமை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, "பாதுகாப்பான தமிழ்நாடு பாராட்டத்தக்க வளர்ச்சி" என்ற தொனியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. 

அதிமுகவின் இந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் ஜெயலலிதா காலத்தின் பாணியில் மக்கள் நலத் திட்டங்களை வலியுறுத்துகின்றன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் 'குல விளக்கு' திட்டத்தை மேம்படுத்தி, தற்போதைய ரூ.1,000லிருந்து இரட்டிப்பாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது. விலை உயர்வு மற்றும் வரி சுமையைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு முறை ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்பது முக்கிய வாக்குறுதி. இதே போல் ஏராளமான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கண்காணிக்க 24 மணி நேரமும் வார் ரூம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

பனைத் தொழிலாளர்கள் பனையேறும் போது தவறி விழுந்த இறந்தால் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளது. 

இதையும் படிங்க: 7 சட்ட கல்லூரிகள்.. ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! அதிமுக சாதனைகளை விளக்கிய எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share