போட்ரா வெடிய... HOTSPOT ஆன பெரம்பூர் தொகுதி..!! விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!
மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் தவெக, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கட்சித் தலைவர் விஜய் நேரடியாக வேட்பாளர்களை அறிவிப்பார் என்று கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
தவெகவின் வேட்பாளர் தேர்வு செயல்முறை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் தானே நேர்காணல்களை நடத்தத் தொடங்கினார். வேட்பாளர் அறிவிப்பு நாளை நடைபெற உள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மார்ச் 30-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு, மார்ச் 30-ஆம் தேதியே தனது தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!
முன்னதாக நாளை தமிழகம் முழுவதும் போட்டியிட உள்ள த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்கிறார். விஜய் மனுத்தாக்கல் செய்த பிறகு, மற்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். முதன்முறையாகத் தேர்தலில் களம் காண்பவர்களுக்காக வழக்கறிஞர் அணி சார்பில் பிரமாணப் பத்திரம் தயாரிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ஆதவிற்கு எதிராக களமிறங்கும் திமுக MLA மகன்...! எதிர்ப்பார்ப்பை தூண்டிய வில்லிவாக்கம் தொகுதி..!!