×
 

கல்வியே கேள்விக்குறி..! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதியா.? உதயநிதி தாக்கு.!

சமூக நீதி நாளில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டிய மாணவர், தற்போது இந்த ஆட்சியாளர்கள் தனது கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம் என்று அவர் கூறினார்.

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாதது என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: வேலை தேடும் இளைஞர்களுக்கு நிதிச் சுமையா..? ஜிஎஸ்டி மறுபரிசீலனை... வேல்முருகன் முக்கிய கோரிக்கை..!

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும், அவரது ஆராய்ச்சிப் படிப்பு தொடரவும் இந்த அரசு துணை நிற்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றிய தவெக அரசை கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share