×
 

"தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!

FCRA எதிர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னியரசு உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனித்தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தத் தீர்மானங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்பதாகவும் வாழ்த்துவதாகவும் கூறினார்.

நேற்று சிறுபான்மை அமைப்பினருடன் முதலமைச்சர் விஜயை சந்தித்து இந்த மசோதா தொடர்பான கோரிக்கைகளை வைத்த நிலையில், இன்றே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதை முதலமைச்சர் நிஜத்தில் நிறைவேற்றியுள்ளார் என்று பாராட்டினார்.

அமைச்சர் மேலும் பேசுகையில், ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு வருவதையே பாஜக அரசு தனது வேலையாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதே பாஜகவின் நோக்கம் என்றும், கிறிஸ்தவர்களை குறிவைத்துதான் இந்த FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெய்ஹிந்த் ஶ்ரீமான்..? ஜெய் ஶ்ரீராம்..? ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..! வன்னியரசை பந்தாடிய நயினார்.!

தொண்டு நிறுவனங்களை முடக்கவும் அவற்றின் சொத்துக்களை அபகரிக்கவும் ஏற்கனவே பலமுறை சட்டத்திருத்தங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இப்போது கிறிஸ்தவ அமைப்புகளை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய சட்டம் கொண்டு வர முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவறு செய்தாலும் சொத்தை முடக்குவதா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், புதிய சட்டத்திருத்த மசோதா கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்கு அனுமதி தருவதாக விமர்சித்தார். FCRA சட்டத்திருத்தம் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: "‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு’... மார்க்கண்டேயன் விவகாரத்தில் அமைச்சர் வன்னிஅரசு பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share