நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தேர்தல் அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். பல்வேறு வாக்குறுதிகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, மகளிருக்கு 50 சதவீதம் விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையும், சிறை துறையும் சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் ஆணவக் கொலை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
கடலும், காடும், கனிமமும் நமதே, உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம், தனியார் துறையில் சமூக நீதி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் மது போதை பொருட்கள் ஒழிப்போம் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது உள்நோக்கத்துடன் சிறப்பு நாடாளுமன்றம் கூட்டம் நடத்துவது மரபுக்கு எதிரானது என்று தெரிவித்தார். திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பாஜகவுக்கு சாதகமாக விஜய் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். இந்த முறை தன்னால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்தும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என விஜய் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!