×
 

மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்த சி.எம்... விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த திருமாவளவன்...!

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் விஜய் பேசி இருப்பது முதலமைச்சர் என்னும் பொறுப்பிற்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் ஏளன பேச்சுக்கு விசிக,  இந்திய கம்யூனிஸ்ட், மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இன்று வெல்பவர்கள் நாளை தோல்வி அடையலாம் என்றும் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் விஜய் பேசி இருப்பது முதலமைச்சர் என்னும் பொறுப்பிற்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கட்சி மேடைகளில் பேசும்போது கூட தவிர்க்க வேண்டிய ஒன்றை சட்டப்பேரவைகள் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை ஏளனப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது, முதலமைச்சர் பதவிக்குரிய மாண்புக்கு உகந்ததல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய இத்தகைய கருத்துகளை, சட்டப்பேரவை போன்ற உயரிய ஜனநாயக அமைப்பில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். தோற்றவர்களை கீழாக பார்ப்பது மிகவும் தவறு என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  வீரபாண்டியன், இன்று வெல்பவர்கள் நாளை தோல்வி அடையலாம் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

முதல்வர் அந்த தந்தையை தேடுகிறேன் என்று சொன்னது ஏற்புடையது அல்ல. தோற்றவர்களை எளிதில் கடந்து செல்வதும் அவர்களை கீழாக பார்ப்பதும் மிக மிக தவறு வெற்றியும் தோல்வியும் மிக இயல்பு. டாக்டர் அம்பேத்கர் சொல்வது போல் தோல்வி இல்லை என்றால் வெற்றிக்கு வெற்றி பொருள் இழந்துவிடும். எனவே நாணயத்தின் இருப்பக்கம் போல் ஜனநாயகத்தின் வெற்றியும் தோல்வியும் எனவே இன்று வெற்றி பெறுகிறவர்கள் நாளை தோல்வி அடையக்கூடிய தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது என்று கூறியுள்ள மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  பெ.சண்முகம் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரை பற்றி கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியிருப்பது மிகவும் தவறானது என சுட்டி காட்டியுள்ளார். 
 

இதையும் படிங்க: ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share