இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதி ஒரு அரசியல் உற்சாகத்தின் மையமாக மாறியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தனது சுற்றுப்பயணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கு பேச்சு நிகழ்த்தினார். ஆனால், அந்த உற்சாகம் விரைவில் ஒரு பரிதாபமான துயரமாக மாறியது. அதிகரித்த கூட்ட நெரிசலில் சிக்கி, 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர். விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.
கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசியல் பற்றிய தலைவர்கள் படையெடுத்துள்ளனர். இரவோடு இரவாக முதலமைச்ச ஸ்டாலின் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துபாயிலிருந்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கரூருக்கு சென்றடைந்தார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தவுடன் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: #BIGBREAKING: கரூர் துயரம்... உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்... விஜய் அறிவிப்பு...!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை சந்திப்பது, சுற்றுப்பயணம் செய்வது அரசியல் கட்சி தலைவர்கள் உரிமை என்றும் அது ஜனநாயக கடமை எதுவும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். ஆனால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இருப்பது அவசியம் என்றும் கூறினார். விஜயின் அரசியல் சுற்றுப்பயணம் ரத்தாகுமா என கேட்ட கேள்விக்கு, இதை விஜய்யிடம் கேளுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: 10 நிமிஷம் கரண்ட் கட்... மிதிச்சு உயிரே போச்சு... உண்மையை போட்டு உடைத்த பெண்...!