×
 

தில்லா, கட்ஸா, கெத்தா இதை சொல்ல முடியுமா? - திமுக, அதிமுகவுக்கு நேரடி சவால் விட்ட விஜய்...!

தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு நான்கு வழிச்சாலையில் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

த.வெ.க தலைவர் விஜய் நெல்லையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்தார். இதற்காக 4 மாவட்ட வேட்பாளர்களும், தொண்டர்களும் நெல்லையில் குவிந்தனர். 

இதற்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் நெல்லைக்கு பயணித்தார். இதனிடையே விஜய் வருகைக்கு முன்பே த.வெ.க தொண்டர்களால் பிரச்சாரம் நடைபெறும் மைதானம் நிரம்பி வழிந்தனர். தமிழக தேர்தல் களத்தையே அதிர வைக்கும் அளவிற்கு கூடிய கூட்டத்திற்கு இடையே பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், உங்க நண்பன், உங்க விஜய் உங்களை தேடி வந்திருக்கிறேன். இந்நேரம் திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தா ஸ்டாலின் சார் கையில அந்த முழு பவரும் இருந்திருந்தா கண்டிப்பா இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையை போட்டு நம்மள வரவிடாம பண்ணி இருப்பார். ஆனா இப்பதான் அவர் ஒரு அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் என்னால கொஞ்சம் ஈசியா வர முடிஞ்சது நினைக்கிறேன்.

இதையும் படிங்க: விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

அதுமாதிரி இந்த திமுக அரசு நமக்கு எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு அவதூறுகளை கொடுக்குது. இன்னும் சில பேரு இன்னும் நிறைய அவதூறுகள் பரப்புனாங்க. இத்தன வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, நம்மள சுத்தி இருக்கிறவங்கள வச்சு ஒரு அவதூறு பரப்புனாங்க; அதுவும் மக்கள்கிட்ட எடுபடல - மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கை மறைமுகமாக குறிப்பிட்டார். இந்த திமுக,  பாஜக ரெண்டு பேருமே வெளியில வேணா தனித்தனியா இருப்பாங்க ஆனா உள்ளுக்குள்ள இவங்க ரெண்டு பேருமே ஒன்னுதான். இவங்க ரெண்டு பேருக்குமே ஒரே நோக்கம்தான். 

அது என்ன நோக்கம் தெரியுமா?, உங்களுக்கு நல்லது செய்ய, உங்களுக்காக உழைக்க, உங்களோட கூடவே நிற்க இந்த விஜய் வந்துரக்கூடாது. அதுதான் அவங்களுடைய நோக்கமே. ஏன்னா இந்த விஜய் வந்தா அவர்களால் ஊழல் செய்ய முடியாது.  அதனல் என் மேல் செம கோபத்தில் இருக்கிறார்கள். அதே மாதிரி அடுத்து அவங்க ஆட்சிக்கு வர முடியாத ஒரு சூழ்நிலையை மக்களே நீங்களே ஆல்ரெடி உருவாக்கிட்டீங்க. இந்த கூட்டணி கணக்கு, அந்த கணக்கு இந்த கணக்கு எதுவுமே எடுபடல.

அரித்மெட்டிக் கணக்கு, மேத்தமேட்டிக்ஸ் கணக்கு எல்லாமே மண்ணுக்குள்ள புதைச்சிட்டீங்க. அப்புறம் கொள்ளை அடிச்சு வச்சிருக்கிற இந்த பணத்தை எல்லாம் வச்சு கல்லாப் பெட்டி கூட்டணின்னு ஒன்னு சேர்த்து வச்சிருந்தாரு. அதெல்லாமே இப்ப கலகலத்து போய் நிக்குது. டாப் தனியா, பாட்டம் தனியா, ரீப்பர் தனியா, ஜாயிண்ட் தனியா அப்படியே நிக்குது. தனித்தனியா எல்லாமே அப்படியே ஒட்ட வச்சுட்டு இருக்கறாரு. கூட்டணி கட்சிக்காரங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டுக்க மாட்டாங்க போலருக்கு. 

இதுக்கு முன்னாடி ஆட்சி பண்ணவங்க, இப்ப ஆட்சி பண்றவங்க கெத்தா, தில்லா, கட்ஸா சொல்ல முடியுமா? நாங்க ஒழுங்கா தான் ஆட்சி செஞ்சோம், ஊழல் பண்ணலைன்னு. அப்படி நீங்க ஒழுங்கா ஆட்சி பண்ணியிருந்தால் பெண்களுக்கு ஏன் இப்படி பாதுகாப்பில்லாம போகுது? என கேள்வி எழுப்பினார். 
 

இதையும் படிங்க: காலையிலேயே ஹேப்பி நியூஸ்... அடுத்த தரமான சம்பவத்திற்கு தயாராகும் விஜய்... தவெகவினர் கொண்டாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share