சபாஷ் சரியான போட்டி: பெரம்பூரில் விஜய்க்கு போட்டியாக முக்கியமான பெண் வேட்பாளரை களமிறக்கும் திமுக... யார் தெரியுமா?
விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் பட்சத்தில், பெண் வேட்பாளர் ஒருவரை களமிறக்கலாமா என திமுக தலைமை யோசித்து வருகிறதாம்.
தமிழக வெற்றி கழக்கத்தின் சார்பில் விருப்பமணு பெறப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் எங்கு போட்டியிட போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரம்பூரில் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கு. வழக்கம் போல் வீ சென்டிமென்ட் காரணமாக அந்த எழுத்தில் தொடங்கும் விருகம்பாக்கம் விழுப்புரம், விருதாச்சலம் உள்ளிட்ட தொகுதிகள் விஜய் போட்டியிடுவார் என சொல்லப்பட்டன. நடிகர் விஜய் தனது இளமைக்காலத்தை கழித்த பகுதியாக விருகம்பாக்கம் கருதப்படுவதால், இந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாக கூறப்பட்டது.
வழக்கமான விஜயின்‘V’ சென்டிமென்ட் காரணமாக, வேளச்சேரி, விருதாச்சலம், விழுப்புரம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளின் பெயர்கள் இடம் பெற்றன. குறிப்பாக வேதாரண்யம் தொகுதியும் விஜயின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. தமிழகத்தின் மையப்பகுதியில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவும், சிறுபான்மையின வாக்குகளை ஈர்க்கவும் திருச்சி கிழக்கு தொகுதியும் பரிசீலனையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இந்தப் பகுதியை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில், விஜய் பெரம்பூரில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால் அது திமுக அதிமுகவுக்கு சவாலாக அமையலாம். திமுகாவின் வலுவான பகுதியாக கருதப்படும் பெரம்பூரில் விஜய் நிற்பதால் அது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். பெரம்பூரில் அவரது போட்டி உறுதியாகும் பட்சத்தில் அந்த தொகுதி அதிக கவனம் பெறும். பெரம்பூர் தொகுதியில் தாவேக்க நிர்வாகிகள் கலாய்வு மேற்கொண்டபோது அவருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ஆதவ்-ஐ விலக்கினால் விஜய்க்கு நல்லது..! பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி அறிவுரை..!!
விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் பட்சத்தில், பெண் வேட்பாளர் ஒருவரை களமிறக்கலாமா என திமுக தலைமை யோசித்து வருகிறதாம். குறிப்பாக மேயர் பிரியாவை பெரம்பூர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என யோசித்து வருகிறார்களாம். ஏனெனில் மேயர் பிரியா சென்னை முழுவதும் பரிட்சியமானவர். சென்னை வரலாற்றின் மிக இளமையான (28 வயது) மற்றும் மூன்றாவது பெண் மேயர் என்ற சாதனை படைத்தவர். வடசென்னையை பூர்வீகமாக கொண்ட பட்டதாரி பெண் போன்ற பல காரணங்கள் விஜய்க்கு எதிராக பிரியாவை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி, மத்திய அரசுக்கு எதிராக திமுக சதிவலை! மௌனம் காக்கும் தமிழக பாஜக தலைவர்கள்! தொண்டர்கள் அதிருப்தி!