×
 

இரண்டு கருடன்; ஒரே வானம்; ஒரே இதயம்! மோடிக்கு வரவேற்பு! இணையத்தில் வைரலாகும் இந்தோனேசிய பாடல்!

பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணத்தை சிறப்பிக்கும் வகையில், 'இரண்டு கருடன், ஒரே வானம், ஒரே இதயம்' என்று தொடங்கும் இனிமையான பாடல், இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஜகார்த்தா: பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேஷியா பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ‘இரண்டு கருடன், ஒரே வானம், ஒரே இதயம்’ என்று தொடங்கும் அழகிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ மற்றும் மக்கள் எல்லையற்ற அன்பைப் பொழிந்தனர். விமான நிலையத்தில் அதிபர் நேரில் வந்து வரவேற்றதுடன், மோடி கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடன் இருந்தார்.

ஜாவா தீவில் உள்ள பிரசித்தி பெற்ற பிராம்பனன் சிவன் கோவிலுக்கு மோடி சென்றபோது அதிபரும் உடன் சென்று சிறப்பித்தார். இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பிலும் அதிபர் பங்கேற்று, “பிரதமர் மோடியின் திட்டங்களை நானும் பின்பற்றுகிறேன். எனக்கும் இந்திய டி.என்.ஏ இருக்கிறது” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். பயணம் முடிந்து ஆஸ்திரேலியா புறப்பட்டபோதும் அதிபர் விமான நிலையம் வந்து மோடியை வழியனுப்பினார்.

இந்த உணர்ச்சிகரமான வரவேற்பை நினைவுகூரும் வகையில் இந்தோனேஷிய கலாசார உடை அணிந்த பெண் ஒருவர் பாடும் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் பாடலில் இந்தோனேஷிய மொழியில் அன்னை பாரதத்தை வரவேற்கும் வரிகள் இடம் பெற்றுள்ளன. “வருக வருக அன்னை பாரதமே… ஓம் நமஹ சிவாய… நமஸ்தே! இரண்டு கருடன்கள், ஒரே வானம், ஒரே இதயம்!” போன்ற வரிகள் மக்களின் மனதை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: புறப்பட்டார் பிரதமர் மோடி! இந்தோனேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பயணம்!

பாடலில் பிராம்பனன் கோவில், போரோபுதூர் கோவில், சோழர்கள் மற்றும் மஜபஹித் மன்னர்களின் சகோதரத்துவ உறவு, இரு நாடுகளின் பொதுவான கலாசார வேர்கள் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. “பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் போரோபுதூர்… பாரதம் வெல்லட்டும், இந்தோனேஷியா வெல்லட்டும்… நன்றி மோடிஜி” என்ற வரிகள் இந்திய-இந்தோனேஷிய உறவின் ஆழத்தை உணர்த்துகின்றன.

இரு நாடுகளும் பழைய நண்பர்கள் என்பதையும், மோடியின் கடின உழைப்புக்கு இந்தோனேஷிய மக்கள் மரியாதை செலுத்துவதாகவும் பாடல் குறிப்பிடுகிறது. இந்த இனிமையான பாடல் வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் வெளியுறவு பயணத்தை மேலும் சிறப்பிக்கும் இந்தப் பாடல், இரு நாட்டு மக்களிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share