வெயிலும்... மழையும்..! வார்னிங் கொடுத்த வானிலை மையம் ..!
அதிகபட்ச வெப்பநிலையும் ஈரப்பதமும் இணைவதால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சுட்டெரித்து வருகிறது. உஷ்ணம் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சூடான காற்று பெரும் புழுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் இன்றும் நாளையும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்பநிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 27 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருக்கிறது. நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒன்றாம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே... உஷார்..!! சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்..!! வானிலை அப்டேட்..!!
கடலோர தமிழகம் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையும் ஈரப்பதமும் நிலவும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. 28, 29 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 30-ஆம் தேதி கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: இந்தந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்காம்..!! வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்..!!