×
 
☰

உஷார் மக்களே..! தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... மிக கனமழை எச்சரிக்கை.!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைவதால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு சுமார் 17 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையேயுள்ள கடற்கரையை அடுத்த சில மணி நேரங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் உருவாகி, படிப்படியாக வலிமை பெற்று வருகிறது. அதன் மையப்பகுதி தற்போது ஆந்திர ஒடிசா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் போன்ற ஆந்திர மாவட்டங்களிலும், கஞ்சாம், புரி, கட்டாக் உள்ளிட்ட ஒடிசா மாவட்டங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்.தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

கடலோரப் பகுதிகளில் அலை உயரம் அதிகரித்து, சில இடங்களில் கடல் நீர் உள்புகும் நிலையும் உருவாகலாம். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது.இந்த மழை காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படலாம். குறைந்த பார்வை திறன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். மலைப்பகுதிகளிலும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளுக்கப்போகுது மழை...! 23 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share