#BREAKING வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்.... எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?
மலாக்கா ஜலசந்தியில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தியில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி அருகே இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு 11:30 மணி அளவில் தீவிரம் அடைந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேககத்திலும் அதே பகுதியில் நிலவி வருது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இந்தியாவிலிருந்து 2600 கிலோ மீட்டர் தொலைவில மையம் கொண்டிருக்கிறது. இதனால தமிழகத்திற்கு நேரடியாக எந்தவித பாதிப்பும் கிடையாது. இருப்பினும் இந்த ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் இன்று மதியத்திற்குள்ள புயலாக உருவாக இருக்கிறது. குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில உருவாகக்கூடிய முதல் புயல் இது. ஏனென்றால் தென்சீன கடற்கரைகளில் புயல் சின்னம் உருவாகி தான் அது மலாக்கா ஜலசந்தியை நோக்கி நகரும். ஆனால் இந்த முறை மலாக்கா ஜலசந்தியிலேயே புயல் வலுப்பெற்றுள்ளது.
இது மீண்டும் நாளை 27 ஆம் தேதியான தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சென்யார் புயல் தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், தமிழகத்திற்கு நேரடியாக மழையோ அல்லது காற்றோ பாதிப்பு கிடையாது என்பதையும் ஆய்வு மையம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்... அடுத்த 48 மணி நேரத்தில் காத்திருக்கும் பேராபத்து...!
அதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தியில் இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் தீவிரமடையும் அதே நேரத்தில், குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் தல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வி வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... 4 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப் போடும் கனமழை...!