இந்தியா தப்பிப்பிழைக்க காரணமே ஹிந்து சமுதாயம்தான்!! இது வலுவான கட்டமைப்பு! மோகன் பகவத் பெருமிதம்!
''உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாகரிகங்கள் சரிந்துவிட்டன, ஆனால் ஹிந்து சமூகம் ஒரு வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதால் இந்தியா தப்பிப்பிழைத்துள்ளது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) சர்சங்கசாலக் மோகன் பகவத் முக்கிய உரையாற்றினார். அந்த உரையில் ஹிந்து சமூகத்தின் வலிமையையும் இந்தியாவின் தன்னிறைவு அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“உலகெங்கிலும் பல பெரிய நாகரிகங்கள் சரிந்து மறைந்துவிட்டன. ஆனால் ஹிந்து சமூகம் தன்னுடைய வலுவான சமூகக் கட்டமைப்பால் இன்றும் நிற்கிறது. அதனால்தான் இந்தியா தப்பிப்பிழைத்திருக்கிறது. ஹிந்துக்கள் இல்லையென்றால் உலகமே இருக்காது. உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம்தான் மையமாக உள்ளது” என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
தேச வளர்ச்சிக்கு முதலில் தேவை வலிமை என்பதை அவர் வலியுறுத்தினார். “வலிமை என்பது பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், அறிவுத் திறன் ஆகியவை. நாடு எந்த வெளி நாட்டையும் சார்ந்திருக்கக் கூடாது. முழுமையான சுயசார்பு (ஆத்மநிர்பர் பாரத்) வேண்டும். எந்தக் குடிமகனும் ஏழையாகவும் வேலையில்லாமலும் மகிழ்ச்சியற்றவராகவும் இருக்கக் கூடாது. அனைவரும் நாட்டிற்காக உழைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா ஹிந்துக்கள் நாடு!! இதற்கு எந்தவித அறிவிப்பும் தேவையில்லை! மோகன் பகவத் அதிரடி!
நக்சலிசப் பிரச்சினை குறித்தும் அவர் பேசினார். “நக்சலிசத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. இனி சமூகம் அதை ஏற்றுக்கொள்ளாது. அது முடிவுக்கு வந்துவிட்டது” என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
பாரதம் என்றால் அழியாத நாகரிகத்தின் பெயர் என்றும், அதை வலுப்படுத்துவதற்கு அ சமூக ஒற்றுமையும் தன்னிறைவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த உரை மணிப்பூரில் நடைபெற்ற சங்கத்தின் நிகழ்வில் ஆற்றப்பட்டது.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்க போகுது... வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!