×
 

100 நாள் வேலைத் திட்டம் ரத்து: "இனி 60 நாட்கள் கூட வேலை கிடைக்காது!" - துரை வைகோ

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ரத்து செய்து புதிய திட்டம் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிமுக எம்.பி., துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) என்பதற்குப் பதிலாக, புதிய 'விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம்' (Vikshit Bharat Rojgar Aur Ajeevika Guarantee Yojana - VB-G RAM G Bill) என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் பாதகங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். முதலில், தேசப்பிதா மகாத்மா அவர்களின் பெயரை நீக்கிவிட்டு, யாருக்கும் புரியாத, சமஸ்கிருத இந்திய மொழியில் 'பாரத் G RAM G' என்று பெயரைச் சூட்டியுள்ளார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போது பெயரளவுக்கு இருக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தில் 60, 50 நாட்களுக்குக் கூட வேலை கிடைப்பது இல்லை கூட, இனி கிராமத்தில் உள்ள ஏழை ஜனங்களுக்குக் கிடைக்கப் போவது கிடையாது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

முன்பு, 'Demand Driven' (கோரிக்கையின் அடிப்படையில் நிதி) என்ற முறை இருந்தது. ஆனால், இனிமேல் இதற்கான நிதி நிர்ணயம் மத்திய அரசுதான் செய்யப் போகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு தேவைப்படுகிறது என்று ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யப் போகிறது. இதன் விளைவாக, தற்போது கிடைக்கும் அந்த 60 நாட்கள் வேலைகூட இனி கிடைக்கப் போவதில்லை.

100 நாள் பணியாளர்களுடைய ஊதியம் 100 சதவீதம் இதுவரை ஒன்றிய அரசுதான் கொடுத்து வந்தது. ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒன்றிய அரசின் பங்களிப்பு 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைக்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 40 சதவீதம் நிதிச் சுமையை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

பொருட்களை வாங்குவதற்கான செலவில் மத்திய அரசின் பங்களிப்பு 75 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாகக் குறைக்கப்படும். இதற்கும் மாநில அரசின் பங்களிப்பு அதிகமாகிறது. இந்த மசோதாவால், தமிழ்நாட்டுக்கு மட்டும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ₹4,300 கோடி கூடுதல் செலவு ஆகப் போகிறது என்றும் துரை வைகோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் பழிவாங்கும் செயலை அம்பலப்படுத்திய நீதிமன்றம் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share