×
 

தபால் ஓட்டில் தில்லுமுல்லு! திமுக பிரமுகர்கள் உடந்தை? ஆவணங்களில் அலட்சியம் காட்டியதால் பறிபோன வாக்குரிமை!

தாங்கள் தவறுதலாக வேறொரு நபரிடம் தபால் ஓட்டு பெற்றதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் உள்ள கதவாளம் பகுதியில் பூத் எண் 51-ஐச் சேர்ந்த 101 வயது முதியவரிடம் தபால் ஓட்டு பெற தேர்தல் அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவருக்கு பதிலாக வேறொரு முதியவரிடம் தபால் ஓட்டு பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தெரியவந்ததும், சமூக ஆர்வலர்கள் சிலர் தேர்தல் மண்டல அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவியாளர் முகமது உள்ளிட்ட அதிகாரிகளை வழிமறித்து விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் தாங்கள் தவறுதலாக வேறொரு நபரிடம் ஓட்டு பெற்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க: ராமதாஸுக்கு இப்பிடி ஒரு நிலையா? சரியும் வாக்கு? வன்னியர் ஓட்டுக்கும் வந்த வேட்டு!

“இரண்டு முதியவர்களின் பெயர் ஒன்றாக இருந்தாலும், தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்த பிறகே ஓட்டு பெற்றிருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிகாரிகள், “நாங்கள் தவறு செய்துவிட்டோம். வேறொரு ஓட்டுச் சீட்டைப் பயன்படுத்தி தவறை சரி செய்கிறோம்” என்று பதிலளித்தனர்.

ஊர் மக்கள் மேலும் குற்றச்சாட்டியதாவது: திமுக நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில், உண்மையான 101 வயது வாக்காளருக்கு பதிலாக வேறொருவரிடம் திமுகவுக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொல்லி கையெழுத்து வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டுப் போட்ட முதியவர், “ஒருவர் வந்து அதிகாரிகள் வருவார்கள், ஓட்டுப் போடுங்கள் என்றார்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். உண்மையான வாக்காளர் தனக்கான ஓட்டு பறிபோனதாக விரக்தியுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே அணைக்கட்டு பகுதியில் தபால் ஓட்டு முறைகேட்டில் ஈடுபட்ட இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கதவாளம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர் மக்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தேர்தல் ஆணையம் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share