+2 தேர்வு முடிவுகள் வெளியீடு..! ஆளுநர் உத்தரவிட்டது ஏன்.? மக்கள் மாளிகை விளக்கம்..!!
ஆளுநர் உத்தரவுப்படி இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்ற சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய உயர்நிலை வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு +2 தேர்வுகள் மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.20% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இது மாணவர்களின் கற்ற விவகாரம் சார்ந்தது என்றும் இதில் தாமதிக்கக்கூடாது எனவும் குரல்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஆளுநரின் உத்தரவு காரணமாக 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசு அமையும் வரை +2 ரிசல்ட் வெளியீட்டை ஒத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பிளஸ் டூ முடிவுகளை தள்ளிப்படக்கூடாது என்பதால் இன்றே ஆளுநர் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!
ஆளுநர் உத்தரவு காரணமாக +2 ரிசல்ட் வெளியிடப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. புதிய அரசு அமையாத நிலையில் மாணவர்களின் நலன் கருதி முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைவதில் தாமதம் நிலவும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை ஆளுநர் கொடுத்திருப்பதாக மக்கள் பவன் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!