8 வயது சிறுவனுக்கு காப்பகத்தில் நடந்த கொடூரம்... சாட்டையைச் சுழற்றிய காவல்துறை...!
8 வயது சிறுவனை பெல்டால் தாக்கிய காப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அன்னூர் அருகே தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் 8 வயது சிறுவனை பெல்டால் தாக்கிய காப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கோட்டைபாளையத்தில் தனியார் சிறுவர்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள 9 சிறுவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் காப்பகத்தில் வசித்து வரும் நான்காம் படித்து வரும் 8 வயது சிறுவன் ஒருவரை அங்கு பணியாற்றும் காப்பாளர் செல்வராஜ் (64), பெல்டால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீசார் காப்பக நிர்வாக அரங்காவலர் நிர்மலா மற்றும் சிறுவனை தாக்கிய காப்பாளர் செல்வராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஆனந்த கண்ணீர் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்... ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் நெகிழ்ச்சி...!
மேலும் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நிறைவடைந்ததை, தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சிறுவனை தாக்கிய செல்வராஜ் மீது புகார் மனு அளித்தனர்.
புகார் அடிப்படையில் காப்பாளர் செல்வராஜ் மீது வேண்டுமென்றே தாக்குதல், குழந்தைகள் வதை, குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஜெயேந்திரரைச் சந்தித்த விஜய் அப்பா, அம்மா... நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலடி...!