எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!
அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் எந்த ஒரு தியாகமும் செய்யாமல் ,இந்த அர்ப்பணிப்பும் செய்யாத கூட்டம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.
அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் எந்த ஒரு தியாகமும் செய்யாமல் ,இந்த அர்ப்பணிப்பும் செய்யாத கூட்டம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.
தியாகத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி இளைஞரணி செயலாளர், செயல் தலைவர், தலைவர், மேயர், துணை முதல்வர், முதலமைச்சர், மிசாவில் கைது என பக்குவம் மிகுந்த ஒரு தலைவர் மு க ஸ்டாலின் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா பேச்சு...
நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட கழக கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளரும் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே எம் ராஜு தலைமையில் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!
அப்போது அவர் கூறியதாவது:- திமுக கண்டிறாத தோல்வியும் அல்ல, வெற்றியும் இல்லை என்பதை குறிப்பிட்டு அவர் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தலில் அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் எந்த ஒரு தியாகமும் செய்யாமல், எவ்வித அர்ப்பணிப்பும் இல்லாமல் ஒரு கூட்டம் வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் தியாகத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி இளைஞர் அணி செயலாளர், செயல் தலைவர், தலைவர், மேயர், துணை முதல்வர், முதலமைச்சர், மிசாவில் கைது என பக்குவம் மிகுந்த தலைவராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் திகழ்வதாக கூறினார்.
இந்த கூட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு பெற்று தந்த சாதிக் என்பவருக்கு மாவட்ட கழகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி ஆ.ராசா கௌரவித்தார். இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் போஜன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார் உட்பட நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!