×
 

ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

காஞ்சிபுரத்தை சேர்ந்த, 'ஏ' பிளஸ் ரவுடி தினேஷை, காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ‘ஏ’ பிளஸ் ரவுடியாக அறியப்படும் தினேஷை காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணைத் தலைவராக நியமித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் தனக்கு பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (58), பிரபல ரவுடி ஸ்ரீதரின் ஓட்டுநராக இருந்தவர். 2016-ம் ஆண்டு கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்ட பிறகு, தினேஷ் ஒரு குழுவாகவும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா மற்றொரு குழுவாகவும் செயல்பட்டு வந்தனர். இந்த இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் காஞ்சிபுரத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ‘ஏ’ பிளஸ் ரவுடியாகவும் போலீஸ் பதிவில் உள்ளார். இதனால் அவரை போலீசார் பலமுறை கைது செய்து கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய பணிகள் நிறுத்தம்!! சிக்சர் மேல் சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்!! சிப்கார் அமைக்க திட்டம்?

‘ஏ’ பிளஸ் ரவுடி என்றால் மிகவும் ஆபத்தான, திட்டமிட்டு குற்றங்களைச் செய்பவர்கள் என்பது போலீஸ் வகைப்பாடு. இவர்கள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு மாநிலத் தலைவர் கனகராஜ் தினேஷை மாநில துணைத் தலைவராக நியமித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் தனது போஸ்டர்களில் கனகராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் கட்சியின் பிம்பத்தை பாதிக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை முக்கிய பொறுப்பில் அமர்த்தியது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.

இதையும் படிங்க: போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share