“இனியாவது அமாவாசையை நாகராஜ சோழன் ஆக்காதீங்க”... விஜயை பங்கமாய் கலாய்த்த சத்யராஜ்...!
பெரியாரைப் போன்று உருப்படியான படத்தில் நடித்தால் மனம் வரும். இல்லையென்றால் பண நிறைவு தான் வரும்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் படிப்பகத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசியதாவது: அன்னூர் - நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் பெரியார் சிலையும், அம்பேத்கர் சிலையும் கிராமம்தோறும் இதே போல் ஜோடியாக வைத்துக் கொள்ள வேண்டும் இதனால் யாரும் சிண்டு முடியும் வேலை நடக்காது. நாம் ஏன் இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறோம் என்று தெரியுமா ஜப்பான் நாட்டில் இக்கிகை என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட ஊரில் 100 வயதை தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்களுக்கு பண நிரவை விட மனநிறைவு முக்கியம். அந்த மன நிறைவு வரும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகமாகி அதன் மூலம் குறிப்பிட்ட ஹார்மோன்கள் நமக்கு சுரப்பதால் அவர்களுக்கு நீண்ட நாள் வாழும் நிலை ஏற்படுகிறது.
அந்த நிலை பெரியார் தொண்டருக்கும், அம்பேத்கர் தொண்டர்களுக்கும் உள்ளது அதனால் தான் பெரியார் அவர்கள் 95 வயது வரை வாழ்ந்துள்ளார். அதுபோல் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது தான் மனநிறைவு வரும்.
இதையும் படிங்க: இது நியாயமா? பட்டு திருந்துங்க...! கொளத்தூர் மக்களை சபித்த நடிகர் சத்யராஜ்..!
பெரியாரைப் போன்று உருப்படியான படத்தில் நடித்தால் மனம் வரும். இல்லையென்றால் பண நிறைவு தான் வரும். அப்படி நிறைய படம் வந்துள்ளது. வேதம் புதிது, பெரியார், அமைதிப்படையில் மோசமான வில்லனாக நான் நடித்தாலும் கூட, இன்றைக்கு அம்மாவாசையாக வந்து அடையாளம் கண்டு......., இனிமேலாவது அம்மாவாசைகளை அடையாளம் கண்டுபிடியுங்கள் சாமிகளா... அமாவாசையில் உள்ள நாகராஜ சோழனை ஆக்கிக் கொண்டே இருக்காதீர்கள். சரிபட்டு வராது அதற்கு கொஞ்சமாவது படிக்கணும், படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தார். அவரது படங்கள் அனைத்தும் பெரியார் கொள்கையும், அண்ணாவின் கொள்கைகளும், பொது உடமை சித்தாந்தங்களும் என நிறைய பரப்பினார். அவருக்கு வரலாறு உண்டு 1967 வரை ஒரு வேகம் இருந்தது. அப்பொழுது இருந்த காங்கிரஸ் கட்சியில் பண்ணையார் கட்சி, மிட்டா மிராசுதார் கட்சி, ஜமீன்தாரர் கட்சி என இருந்தது. அப்போது அதில் இருந்த அனைவரிடமும் நில புலன்கள் உண்டு. வில்லு வண்டி உண்டு, ரேக்ளா ரேஸ் வண்டி ஓட்டுவார்கள். ஆனால் படிப்பறிவு கிடையாது. அவர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருப்பார்கள். அதற்கு முன்னால் இருந்த போராட்டம் வேகமாக இருந்தது. 1967இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் நாம் தான் அந்த இடத்தை பிடித்து விட்டோமே என்ற சின்ன மெத்தனம் வந்தது. நமது திராவிடர் கழகத் தோழர்கள் மட்டும் கருத்துக்களை முன்னெடுத்து போனார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் முன்னெடுத்துக் கொண்டு சென்றனர். இருந்தாலும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பெருமை வந்தது. அண்ணா முதல்வராக அமர்ந்த பிறகு "அண்ணா அமர்ந்தார் தமிழ்நாடு எழுந்தது" என்று சொல் வந்தது. அதன் பிறகு தலைவர் கலைஞர் வந்த பிறகு நிறைய சமூக சீர்திருத்தம், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர் என அனைவரையும் மேல்நோக்கி வளர பல விதைகளை விதைத்தார். அதை சட்டங்களாகவும் விதைத்தார். பெண்களுக்கு சொத்துரிமை, பட்டியல் இனத்தவருக்கு உரிமை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமை என விதைத்து.. விதைத்து.. இன்று அந்த விதைகள் எல்லாம் வளர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து உங்கள் முன் நிற்கிறது. அப்படி நிற்கும் பொழுது ஏன் நாம் இந்த நிலைமைக்கு வந்தோம் என்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும். வெளிநாடுகளிலும், பெரிய பதவிகளிலும் நாம் நிற்கிறோம். நாம் எப்படி இந்த நிலைநோக்கி வந்தோம் என்று நமது சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்காமல் விட்டு விட்டோம். அதன் சின்ன செட் பேக் தான் இப்போது இப்பொழுது ஜென் ஜி' (Gen Z DMK) டிஎம்கே என்று நன்றாக பணி செய்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து முன் வரலாறுகளையும் நாம் படிக்கும் போது மாற்று சிந்தனை உள்ள "பாரதிய ஜனதா" கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களும், அம்பேத்கர் அவர்களும் என்ன சொன்னார்கள்! சமூகநீதி என்றால் என்ன? என்று படித்துப் பாருங்கள். அது சரியா இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தலையை சுற்றி வீசி விடுங்கள். அதைதான் தந்தை பெரியாரும் கூறியுள்ளார். நான் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று இல்லை. உங்கள் புத்தியில் வைத்து சிந்தித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
நான் யாரு மேலையும் வெறுப்பு பாராட்டவில்லை. எதிரியாகவும் நினைக்கவில்லை. எனது அன்பார்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தம்பிகளுக்கும் என்னுடைய அன்புத்தம்பி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர விஜய் உடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் சொல்லுகிறேன் நீங்கள் கொஞ்சமா யோசித்துப் பாருங்கள். உங்க தலைவர் என்ன சொல்லி இருக்கிறார்! எங்களது கொள்கைத் தலைவர் பெரியார், அம்பேத்கர் என்று சொல்லி இருக்கிறார். அப்பொழுது அதை நோக்கி நீங்கள் கொஞ்சமாகவது போக வேண்டுமா? இல்லையா? தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களே தம்பிகளே, தங்கைகளே, சகோதர, சகோதரிகளே உங்கள் தலைவர் சொன்ன பெரியாரையும், அம்பேத்கரையும் என்னவென்று தேடிப் போய் பாருங்கள்.
திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று பேசி இருக்கிறார். நாங்க பேசவில்லை உங்க தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசி இருக்கிறார். அதை தேடிப் போய் பாருங்கள் அதுதான் முக்கியம். நாங்கள் அதை செய்தோம். நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் தான்.
எம்ஜிஆர் படத்தில் அனைத்திலும் அண்ணா... அண்ணா... என்கிறார், என அவரின் ஒரு படக் காட்சி எடுக்கும் இடத்திற்கு சென்று பார்த்தேன். அவர் அடுத்த காட்சிக்கு அமர்ந்திருக்கும் போது அதை பற்றி யோசிக்காமல் முரசொலியைப் படித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் ரசிகர் மன்றமும், கொள்கை சார்ந்த மன்றமும் ஒன்றாக இருக்கும். ஒரு பக்கம் கருணைக்கடல் எம்ஜிஆர் ரசிகர் மன்றம், நாவலர் படிப்பகம். மறுபக்கம் கலைக்கடல் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம், கர்மவீரர் காமராசர் படிப்பகம் என்று இருக்கும். இதனுள் நிறைய புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும். விளையாட்டுப் பொருட்களும் இருக்கும். மாலை நேரம் சென்றால் அதனை படிக்கலாம். அப்போது இரு மன்றங்களை சார்ந்தவர்களும் நண்பர்களாக இருப்போம்.
தம்பிகளும்.... தங்கைகளும்.... நண்பா... நன்பிக்ககளுக்கும்... நான் சொல்கிறேன் தயவுசெய்து நீங்கள் தேடிப் போய் அவர்களின் புத்தகங்களை படியுங்கள் என்று நான் சொல்லவில்லை. உங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார். தயவு செய்து போய் பாருங்கள் ஏனென்றால் (பெரியார், அம்பேத்கர்) பெயர் மட்டும் கேட்டால் பத்தாது. அதனுள் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள். நீங்கள் அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் இன்னும் பக்குவப்படுவீர்கள்... பண்படுவீர்கள்... மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்கள் சமூகம் இன்று இந்த நிலைமைக்கு வருவதற்கு தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்பது தெரியவரும்.
பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகவும், அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராகவும் சித்தரித்து, இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இரு கண்கள். பெரியார் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராகவும், அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராகவும் இருந்திருப்பார்கள். அவ்வளவு ஏன், இவர்கள் ஜெர்மனியில் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸாகக் கூட இருந்திருப்பார்.
நடித்தவர்கள் எல்லோரையும் படிக்க சொல்லி சொல்லுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம். அது போல் ஒவ்வொருவரும், ஒவ்வொருத்தரிடம் உள்ள பெருந்தன்மையை கற்றுக் கொள்ள வேண்டும். நமது திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் என்னாலும் எங்களுடைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடமிருந்து பல பெருந்தன்மைகளை யார் முதல்வராக வந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு பெரியார் அம்பேத்கார் சிலை வைக்க அதற்கு நிதி திரட்ட நீண்ட நாட்களாக பெரும்பாடு பட்டு உள்ளார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் வேறு எந்த கிராமத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை வைக்க நினைப்பவர்களுக்கு நான் முன்னின்று உதவி செய்வேன். அதேபோல் முன்னாள் இந்திய பிரதமர் வி பி சிங் அவர்களுக்கும் ஒரு சிலை வையுங்கள் என்பது எனது கோரிக்கை. 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் கொள்கைகளை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்த்து வருகிறார்கள். என்று பேசினார்
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் திருச்சி சிவா மகள்! கணவரும், அப்பாவும் திமுக! தவெகவில் புதுவரவு!