×
 

தமிழக பொருளாதாரத்திற்கு பேராபத்து... சி.எம். விஜய் முடிவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு...!

இதனால் தமிழகத்தின் பொருளாதார நிலை  பெரும் பின்னடைவு ஏற்படும். ஏற்கனவே 90% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்தத் திட்டம் ரத்து என்பது தமிழக பொருளாதாரத்திற்கு பெரும் அபாயம் எ

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு என்றும், பொருளாதாரத்திற்கு பெரும் அபாயம் என்றும் இந்தத் திட்டம் தமிழகத்தில் நீக்கம் செய்யப்பட்டால், ஆந்திராவிற்கு இந்த திட்டம் சென்று விடும். எனவே தமிழக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை கஸ்தூரி இன்று கும்பகோணத்தில் செய்தியாளரிடம் தெரிவித்தார் .

 திருமண நிகழ்விற்காக நாகப்பட்டினம் வந்திருந்த நடிகை கஸ்தூரி இன்று மதியம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,  பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் பொருளாதார நிலை  பெரும் பின்னடைவு ஏற்படும். ஏற்கனவே 90% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்தத் திட்டம் ரத்து என்பது தமிழக பொருளாதாரத்திற்கு பெரும் அபாயம் என்றும், தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் இந்த திட்டத்தை கைவிடப்பட்டால் அண்டை மாநிலமான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவிற்கு இந்தத் திட்டத்தை கொண்டு செல்வார். எனவே தமிழக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மறு பரிசினை செய்ய வேண்டும் என கஸ்தூரி தெரிவித்தார்.

 மேகதாது அணை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கூட்டணியில் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவதன் மூலம் டி கே சிவகுமாரின் நிலைப்பாடு மாறும். பாராளுமன்ற தேர்தலின் போது இதே கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறி இவர்களது உறவில் சிறு உரசல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். சட்டசபையில் தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கள் பேசும் போதெல்லாம் முதல்வரை பாராட்டி பேசுகின்றனர். குறிப்பாக பாட்டு பாடுகின்றனர். கொடுத்ததெல்லாம் கொடுத்தார் ஊருக்காக கொடுத்தார் என பாடுகிறார்கள்.
 ஊர் மக்கள் தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். நீங்கள் பொதுமக்களுக்கு ஒன்றும் தரவில்லை என கஸ்தூரி தெரிவித்தார். 2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகம் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கவில்லை .
மகாமக ஏற்பாடு என்பது குட்டி ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடு போல தங்கமிடம் வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்த கொடுத்தல் போன்றவற்றிற்கு திட்டமிடல் அவசியம்.

இதையும் படிங்க: 118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

மத்திய அரசு மகாமக விழாவிற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக கஸ்தூரி தெரிவித்தார்.  அந்த நிதியில் இருந்து தமிழக அரசு இதுவரை ஒரு பைசா கூட வாங்கவில்லை என்றும், மகாமக விழாவிற்கு மோடி, அமித்ஷா போன்றவர்கள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்தார் .

மத்திய அரசின் பணிகளில் ஒன்றான கும்பகோணம் ரயில்வே நிலைய அபிவிருத்தி பணிகள் ஆமை விதத்தில் நடைபெறுவதாக நடிகை கஸ்தூரியிடம் தெரிவிக்கப்பட்டது .
தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் தெரிவித்தது போல் ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவதற்கு பதில் தற்போது மூன்று சிலிண்டர்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நிதி நிலை சரியாக இல்லை.

 பரந்தூர் விமான நிலையம் போன்ற பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலையில் இலவசங்கள் எப்படி சாத்தியப்படும் என கேள்வி எழுப்பினார். எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்க வேண்டும் என திட்டம் தீட்டி பிறகு அவர்களிடம் கருத்து கேட்பது சரியாக இல்லை என்றும் இதே போல் தாய்மாமன் சீர் திட்டத்திற்கு ஏற்கனவே நகை கடையை முடிவு செய்துவிட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு இருப்பது பேசும் பொருளாகி உள்ளது என்றார் .

நடைபெறக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்குமா என்பது  கேள்விக்குறி யென கஸ்தூரி மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share