×
 

“விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் ஆளுநர் தாமதம் செய்வது பாஜக-விற்கே பின்னடைவாக முடியும் என நடிகை கஸ்தூரி சங்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதில் நீடித்து வரும் தாமதம் குறித்துப் பிரபல நடிகை கஸ்தூரி சங்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக-விற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்:

விஜய் ஆட்சி அமைப்பதில் ஏற்படும் எந்தவொரு தடையும், அது பாஜக-வின் மறைமுக அரசியலாகவே மக்களால் பார்க்கப்படும். உண்மையில் அப்படி இல்லையென்றாலும் கூட, அப்படித்தான் கருதத் தோன்றும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திரையுலக ஜாம்பவான் ஆர்.பி. சவுத்ரிக்கு இறுதி அஞ்சலி: நேரில் வந்த தவெக தலைவர் விஜய்!

“எந்தத் தவறும் செய்யாமல் பாஜக ஏன் தேவையில்லாத பழிக்கு ஆளாக வேண்டும்? ஆளுநர் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் அது ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும்” என்று அவர் சுளீரெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தான் குறுக்கே நிற்கப்போவதில்லை என்று கூறிவிட்ட நிலையில், இப்போது அனைவரும் பாஜக-வை மட்டுமே சந்தேகப்படுவார்கள் என அவர் விளக்கியுள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைப்பதே அரசியலமைப்புச் சட்டப்படி சரியானது என அவர் வலியுறுத்தியுள்ளார்:

தவெக-வை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது ஆளுநரின் கடமையாகும். எந்தவித இடையூறும் இன்றிப் புதிய அரசு அமைவதை விரைவுபடுத்துவது பாஜக-வின் சொந்த நலனுக்கே உகந்ததாகும் என்று கஸ்தூரி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறிக்கு ஆளுநர் மாளிகை மட்டுமல்லாது பாஜக-வும் ஒரு காரணம் என்ற ரீதியில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: பதவியேற்பு நடக்குமா? விஜய்யின் முதல்வர் கனவில் சிக்கல்! ஆளுநருக்குத் திருப்தி இல்லை எனத் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share