×
 

அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியை சந்தித்தது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. 59 இடங்களுக்கு குறைந்தது, அதிமுக 47 இடங்களைப் பெற்று, முதல் முறையாக தொங்கு சட்டமன்றம் உருவானது. 

இந்தத் தோல்வி தி.மு.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2026 சட்டமன்ற தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதற்கிடையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சியின் பிளவு மற்றும் அதிருப்தி உள்ளிட்டவை காரணமாக பிளவுபட்டு வருகிறது.

பல்வேறு அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர்.

இதையும் படிங்க: அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்து வரும் அனைவரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிமுகவினர் ஆதரித்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது எனவும் கூறினார். கலைஞரின் அனைத்து உண்மையான விசுவாசிகளையும் தமிழக வெற்றி கழகத்திற்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "இது ஒன்னும் லாட்டரி வியாபாரம் இல்ல"..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share