×
 

பொதுக்கூட்டத்தில் ஏடாகூடமாக பேசிய நிர்வாகி... அதிரடியாக ஆக்‌ஷன் எடுத்த அதிமுக!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக நிர்வாகியை கட்சி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளரும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளருமான அப்துல் ஜப்பார் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசுகையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள். நான் ஒரு இஸ்லாமியன்.

ஆனாலும், இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன். காரணம், முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கோவையில் முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவன். கோவையில் என்ன நிலவரம் என்பது எனக்கு தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முஸ்லிம் மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தார். ஆனாலும் கூட அதிமுகவுக்கு அவர்கள் ஓட்டு போடவில்லை.

இதையும் படிங்க: ஆபாச ஆக்ஷன்! பூச்சாண்டி காட்டிய போலீஸ். நொங்கெடுத்த ADMK நிர்வாகி...

2024 மக்களவைத் தேர்தலிலும், நாம் பாஜக கூட்டணியில் இல்லை. ஆனால், நம்முடன் இருந்த முஸ்லிம் கட்சி கூட திமுகவுக்கு தான் ஓட்டு போட்டது.  அதனால் நாம் ஏன் பாஜகவை பகைக்க வேண்டும்? இப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் நமக்கு மிகப்பெரிய பலம் வந்துள்ளது. ஆள் பலம், அதிகார பலம் கிடைத்துள்ளது. இன்று அதிகாரம் தான் அனைத்துக்கும் தேவைப்படுகிறது.

பாஜக - அதிமுக பலமான கூட்டணியாக வரும், பலமான சக்தியாக உருவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திடீரென அவர் ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share