நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!
கடந்த 120 நாள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது . எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது. மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் மனமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். கடந்த 120 நாட்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது.
எனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்.
அதற்கான அரசியல் சதுரங்க காய்களை எடப்பாடி பழனிச்சாமி நகர்த்தி வருவதாக அதிமுகவின் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோவில் என்ற இடத்தில் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
அதிமுகவின் சட்டமன்ற கொறடாவாக விளங்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோவில் என்ற இடத்தில் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார் .
இதையும் படிங்க: விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள மதுராந்தகம், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் .
அதற்கான அரசியல் சதுரங்க காய்களை எடப்பாடி பழனிச்சாமி நகர்த்தி வருவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .
கடந்த 120 நாள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது .
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது. மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .
மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற ஜோசப் விஜய் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. விவசாய கடன் தள்ளுபடியில் குளறுபடி.
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் தருவதாக கூறினார் அது என்னவானது என தெரியவில்லை .
ஆறு சிலிண்டர்கள் தருவதாக கூறினார். மூன்று சிலிண்டர்கள் என அறிவித்துள்ளார்.
அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிலும் பல நிபந்தனைகள். த.வெ.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் .
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நபர்கள், கைவிரலில் வைத்த மை காயும் முன் 50 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு கட்சிக்கு துரோகம் செய்து கட்சி மாறினர் .
எனவே இந்த இரு தொகுதிகளிலும் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல்களில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .தமிழகத்தில் உள்ள நிதி நெருக்கடியில் புதிய சட்டமன்றம் தேவைதானா ? என கேள்வி எழுப்பினார்.
பட்டினம் பாக்கம் பகுதியில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நிதிநிலை சரியானதும் வேறு இடம் பார்க்கலாம் என்றார்.
முதலீடுகளை திரட்டப் போவதாக கூறி லண்டன் சென்ற ஜோசப் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என நாட்டு மக்கள் நன்றாக பார்த்து வருகின்றார்கள் .
தவெக அரசு, அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக உள்ளது. தவெக அரசின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .
இதையும் படிங்க: எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!