×
 

பொள்ளாச்சி தீர்ப்புக்கு லேபில் ஒட்ட பார்த்த திமுக... அதிமுக மாஜி அமைச்சர் மாஸ் பதிலடி!

தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் வாழும் பெண்கள் அத்தனை பேரும் வரவேற்றுள்ளது மட்டுமின்றி முழு பாதுகாப்பை பெண்களுக்கு அளித்துள்ள தீர்ப்பாக அமைந்துள்ளது

கோபி அருகே உள்ள மூனாம்பள்ளியில் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

பொள்ளாச்சியில்  பாலியல் வழக்கில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட  வன்கொடுமை வழக்கை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுவதற்கு அன்றைய அதிமுக அரசு தான் அதற்கான ஆணையை பிறப்பித்தது. அந்த தீர்ப்பை பொருத்தவரை நேர்மையாகவும், பெண்களுக்கு இழைக்கப்படுகிற இது போன்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதற்காக தான் அன்றைய அரசு ஆணையை பிறப்பித்தது.

அதனடிப்படையில் தான் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.உண்மையில் இது வரவேற்க,போற்றத்தக்க ஒன்று. பெண்களுக்கு ஏற்படுகிற நிலை எதிர்காலத்தில் அமைந்து விடக்கூடாது என்பதற்காக தான் காலத்தால் அழியாத தீர்ப்பாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்... இரவோடு, இரவாக பேசி முடிக்கப்பட்ட டீல்... பரபரப்பு பின்னணி!

இந்த தீர்ப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில்  மட்டுமன்றி இந்தியா முழுவதும் வாழும் பெண்கள் அத்தனை பேரும் வரவேற்றுள்ளது மட்டுமின்றி முழு பாதுகாப்பை பெண்களுக்கு அளித்துள்ள தீர்ப்பாக அமைந்துள்ளதாக போற்றி புகழ்ந்து இருக்கின்றனர்.

அதை நாங்கள் வரவேற்று இந்த தீர்ப்பை பொறுத்த வரை நியாயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த பாதுகாப்பு இனி எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை வரவேற்கிறோம். தூக்கு தண்டனை வழங்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.

இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share