அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!
தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவும், பாஜகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவும், பாஜகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பூத் கமிட்டி தயாரிக்கக்கூடிய பணிகளை வந்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில, அந்த பணிகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை வேகப்படுத்த வேண்டும். அதேபோல ஏற்கனவே மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிவடைந்து இருக்கிறது.
சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்னும் பிரச்சார பயணம் நடைபெறாமல் உள்ளது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதற்கு என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தற்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: என்ன பயமா? பதில் சொல்லுங்க முதல்வரே… கரூர் சம்பவம் குறித்து நயினாரின் நச் கேள்விகள்…!
மற்றொருபுறம் கமலாலயத்தில் இன்று பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்யக்கூடிய விதமாக முக்கிய நிர்வாகிகளோடு தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்த நிலைப்பாடுகளை ஆலோசிக்க கூடிய வகையில் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறுகின்றது.
பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல் மேலிட பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜாகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றி இருக்கின்றார்கள். ஏறக்குரிய இரவு 8 மணி வரை நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த காலத்தில் இருந்தவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வியூகங்கள் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தேர்தல் பரப்புரையிலே ஈடுபட்டு வருகின்றார். அவரோடு இணைந்து பாஜாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடிய விதமாக பயண திட்டத்தை வகுப்பதற்கான ஆலோசனை நடைபெறுகின்றது. அதுமட்டுமல்லாமல் வரும் 12 ஆம் தேதி மதுரையிலிருந்து பாஜகவின் மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் தேர்தல் பரப்புரையை தொடங்குகின்றார். ஒவ்வொரு நாளிலும் மாலை நேரத்திலே மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டமாக அதை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுதொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டமானது நடந்து வருகிறது.
இதையும் படிங்க: போலீஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்! அவ்ளோ மெத்தனம்... விளாசிய நயினார்…!