#BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!
சட்டப்பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையின் உரையை புறக்கணித்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த நிலையில், தொடர்ந்து அதிமுகவினரும் சட்டசபையில் இருந்து வெளியேறினார். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் செயல் சட்டப்பேரவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.
தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ரவியின் செயல்பாடுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கிடையில் அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறிய அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு வெளியேறி சென்றனர். ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த நிலையில் தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்துள்ளனர். வந்த சில நிமிடங்களிலேயே வெளிநடப்பு செய்திருப்பது சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 5 அறிவிப்புகளால் ஆட்டம் கண்ட திமுக.. காப்பி அடிச்சோமா? செல்லூர் ராஜு பேட்டி..!