“அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!
அதிமுகவை முடிந்து போன கட்சி என விமர்சித்ததோடு, உயிர்ப்புடன் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனபால் ஆதரவு தருவார் எனவும் நம்பிக்கை
முன்னாள் சபாநாயகர் தனபால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தனபாலின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன் முதன் முதலாக ராசிபுரத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, பயணியர் மாளிகையில் முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்துக்கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்,
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று மக்களின் குறைகளை தீர்க்க உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?
மேலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 6 நாட்களில் குற்ற நிகழ்வுகள் குறைந்து சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், கடந்த ஆட்சியில் தலைவிரித்து ஆடிய ரவுடிகள் கலாச்சாரம் தற்போதைய ஆட்சியில் ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் தந்தையும், முன்னாள் சபாநாயகருமான தனபால் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், முன்னாள் சபாநாயகர் தனபால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவும், ஆளுங்கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு அவரிடம் கோரிக்கை வைப்பேன் எனவும் தெரிவித்தார்.
அதோடு, அதிமுக முடிந்து போன கட்சி என்று விமர்சித்த லோகேஷ் தமிழ்ச்செல்வன், உயிர்ப்புடன் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனபால் ஆதரவு தருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!