அதிரப்போகும் தமிழக சட்டப்பேரவை... அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை...!
தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது விதி தமிழ்நாடு சட்டப்பேரவை பொருத்தவரை நடப்பாண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் நடந்து முடிந்தது அதன் பிறகு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான விவாதம் தொடங்கியது.
மேலும் இந்த நிதிநிலை கூட்டத் தொடருக்கான விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை துறை ரீதியான மாணியக்கக் கோரிக்கை விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: வேன் கெடச்சதும் ஒப்பாரி வெக்குறாரு EPS... செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்...!
இதனையடுத்து நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை அலுவல் சார்ந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியானது. 6 மாதங்களுக்குப் பிறகு இன்று கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையானது வரும் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, நாகாலாந்து ஆளுநர் மறைவு உள்ளிட்ட துயர சம்பவங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்த உள்ளார். சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய கேள்விகள், விவாதங்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஆட்டம் காணப் போகுது... திமுக கூட்டணியில் உரசல்... இபிஎஸ் உறுதி...!