×
 

திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான்... எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 54-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் கட்சியின் ஆண்டு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, எளிய மக்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி வளர்ந்தது.

1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, எம்.ஜி.ஆர்.யின் மறைவு அதிமுகவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் வெற்றி நடை போட்டு அதிமுக இயங்கியது. அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது அவரது தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இதனிடையே, மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமான அதிமுகவின் துவக்க விழாவான இன்று, அண்ணா வழி திராவிடம் என்ற இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக என்றார்.

இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!

ஆனால், நாம் உயர்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம் என்று தெரிவித்தார். தீயசக்தி திமுகவின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவின் உருட்டு கடை அல்வா... இது நம்ம லிஸ்டிலயே இல்லையே... நக்கலடித்த இபிஎஸ்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share