கையில் மனுவோடு பிரதமரை சந்தித்த EPS... என்னென்ன கோரிக்கைகள் தெரியுமா?... முழு விவரம்...!
கோவை வந்த பிரதமர் மோடியிடம் ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
கோவை கொடிசியாவில் இன்று இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்கினார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கொண்டனர்.
தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை விடுவித்தார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி தனி விமான மூலம் கோவைக்கு வந்தடைந்தார். தற்போது அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். பிரதமர் மோடியை வரவேற்றபோது பிரதமர் மோடியிடம் ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
இதையும் படிங்க: கையில் கோரிக்கை மனுவுடன்... இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!
எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த மனுவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு;
1.கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்.
2.இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கர்ஸ் ஜி.எஸ்.டி 18 இல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.
3.கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
4.கோவை - பெங்களூர் இடையே இரவு ரயில்கள் சேவையை தொடங்க வேண்டும்.
5.இயற்கை வேளாண் உள்ளீடுகளுக்கு அதிக சலுகை வழங்க வேண்டும்.
6.ஆர்கானிக் விலை பொருட்களை வாங்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
7.விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க வேண்டும்.
8.மறுசுழற்சிப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க வேண்டும்.
9.கோவை - ராமேஸ்வரம் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ரவுடிகள் அட்டகாசம்... அலறி ஓடும் மக்கள்... EPS கடும் தாக்கு...!