×
 

மாஸ் ஆரம்பம்...! இபிஎஸ் பெயரில் முதல் விருப்ப மனு… களைகட்டிய அதிமுக தலைமைக் கழகம்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் முதல் விருப்பம் மனு பெறப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன.

கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதிமுகவை பொருத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே தொடங்கினார். இரண்டு கட்டங்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

இதையும் படிங்க: பெரும் புகழுக்கு சொந்தக்காரர் பெரும்பிடுகு முத்தரையர்… அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு EPS நன்றி…!

இந்த நிலையில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுப்பதற்கான கால வரம்பை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் முதல் விருப்பமுனு பெறப்பட்டது. விருப்பமான கல் பெறப்படும் நிலையில் அதிமுக தலைமை கழகம் களைகட்டி உள்ளது. 

இதையும் படிங்க: அமித்ஷாவை சந்திக்கும் நயினார்... லிஸ்ட் போட்டாச்சு... இபிஎஸ்- யிடம் பேசியதை விளக்க போராராம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share