×
 

#BREAKING பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... சி.வி.சண்முகத்திற்கு காலையிலேயே நிம்மதி போச்சு... பறந்து வந்த அதிர்ச்சி செய்தி...!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், தற்போது எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். அக்டோபர் 11ம் தேதி அன்று, விழுப்புரத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,  “பொங்கல் முடிந்ததும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும், ஓட்டு போட்டால் இலவசமாக கொடுப்பாங்க” என பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. 

அரசின் இலவச திட்டங்களோடு இணைந்து பெண்களை இழிபடுத்தி பேசிய சி.வி.சண்முகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகளிர் அமைப்புகள் கொந்தளித்து வந்தன. மேலும் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மகளிர் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

 இலவச திட்டங்களுடன் இணைத்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணயம் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறது. சி.வி.சண்முகம் வரும் ஏழாம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: எடப்பாடியை நோக்கி ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’... குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த மாஜி அமைச்சர்கள்...!

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து பற்றி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், கடந்த அக்டோபர் 14ம் தேதி அன்று மாநில மகளிர் ஆணையம் சார்பில் சி.வி.சண்முகத்திற்கு விளக்கம் கேட்டு முதல் முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அக்டோபர் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மாநில மகளிர் ஆணையம் சி.வி.சண்முகத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் விலக்கு கேட்கப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் சி.வி.சண்முகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: சிவி சண்முகம் எடப்பாடிக்கு தேவை... அதான் இந்த அமைதி... TKS இளங்கோவன் விமர்சனம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share