“தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்...!
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் உள்ளே வர வாய்ப்பு இல்லை கடம்பூர் ராஜூ கருத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் : தேர்தல் நேரத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் நாங்கள் டெல்லிக்கு செல்வதும் அவர்கள் இங்கு வருவதும் இது வாடிக்கையான ஒன்று இதே டெல்லி கனிமொழி செல்கிறார் அவர்களும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பேட்டி அளித்துள்ளார் கூட்டணி குறித்து தான் பேசினோம் என கூறியுள்ளார். தற்போது கூட்டணி நேரத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது.
தேர்தலுக்கு முன்பு எந்த கட்சி பற்றியும் கணிக்க முடியாது மக்கள் தீர்ப்பு தான் இறுதியில் தெரியும். த வெக உடன் காங்கிரஸ் சென்றாலும் சரி, தவெக தனியாக நின்றாலும் சரி அவர்கள் வாக்கு வாங்கி அதிமுகவை பாதிக்காது . திமுகவுக்கு மாற்று அதிமுக தான் வருகின்ற தேர்தலிலும் அதுதான் நடக்கும்.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் உள்ளே வர வாய்ப்பு இல்லை எங்களிடம் ஆட்சியில் பங்கு என்று குரல் வரவில்லை அது திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் ஆட்சி பங்கு என்று கேட்கின்றனர். தவெக தலைவர் விஜயின் விவாகரத்து விஷயம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் அதை அரசியலாக்குவது சரியாக இருக்காது அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார்
இதையும் படிங்க: “இரட்டை இலையை அமுக்குங்க… 10 ஆயிரம் வீட்டுக்கு வரும்!” – கடம்பூர் ராஜூ அதிரடி பேச்சு...!
இதையும் படிங்க: அரபு நாடுகளில் இருந்து மீட்பு பயணம்! ஃபுஜைராவில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட்!