×
 

"தேர்தல்ல இதெல்லாம் சகஜமப்பா..." - விஜயின் முதல்வர் ஆசையை நக்கலடித்த அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ...!

விஜயின் முதல்வர் கனவை விமர்சிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை கிளப்பியுள்ளது.

எந்த ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட முதலமைச்சர் என்று சொல்வார்கள் - தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்  தேர்தலுக்கு முன்பாக சில பேர் ஆருடம் கூறுவார்கள் நான் முதலமைச்சர் நீ முதலமைச்சர் என்று அது இயற்கை 

இதையும் படிங்க: மிஸ் ஆகவே கூடாது... SIR பணிகளை கண்காணிக்க குழு... விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை...!

எந்த ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட முதலமைச்சர் என்று சொல்வார்கள். 10 சதவீதத்திற்கு கீழ் வாக்கு வங்கி உள்ளவர்கள் கூட முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள். தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம். 

50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 34 ஆண்டுகள் முதல்வர்கள் இருந்த இயக்கம் அதிமுக. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முதன் முதலில் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக தான் என்றும், மக்கள் மற்றும் தொண்டர்களின் நம்பி தேர்தல் களத்திற்கு வந்துள்ள இயக்கம் அதிமுக , மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்பது அதிமுகவின் முழக்கமல்ல மக்களின் முழக்கமாக மாறி உள்ளது என்றார்.

விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக அறிவித்து அதன் மூலமாக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக வெற்றி கழகத்தையும், விஜயையும் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய்க்கு என்ன பலம் இருக்கு? - நறுக் கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share