×
 

“நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

பசங்கள கொஞ்சம் பார்த்து கவனமா வளர்த்துங்க. விளையாட்டுப் புத்தியா போய்ட போறாங்க. ஏற்கனவே நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய் இறந்துட்டான்.

 இன்னைக்கு வேற பெருமாநல்லூரில் 15 பேர் மயக்கம் போட்டாங்களாம் பாக்குறதுக்கு ஆள் இல்லையாம் - முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பணன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து விமர்சனம். 

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே‌.சி.கருப்பணன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று சின்னியம்பாளையம், திப்பிசட்டிபாளையம் சேர்வராயன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கே.சி.கருப்பணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம் மேற்கொள்ள வந்த வேட்பாளர் கே.சி.கருப்பண்ணனுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசுகையில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தவர், 

இதையும் படிங்க: அம்மா இருந்தவரை எல்லாம் வாலை சுருட்டிட்டு இருந்துச்சு! மன்னார்குடியில் சசிகலா அதிரடி!

விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது அவர் பேசும்போது ஒரு பைத்தியக்காரர் ஊரெல்லாம் சுத்துறாரு எனக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்டுகிட்டு, விஜய் விஜய் விஜய்-னு கரூர்ல 41 பேர் இறந்தார்கள், மதுரையில் இரண்டு பேரும் சேலத்தில் இரண்டு பேரு இன்னைக்கு பெருமாநல்லூரில் 15 பேர் மயங்கி கிடக்கிறாங்க பாக்குறதுக்கு ஆள் இல்லையாம்.

கொஞ்சம் பசங்கள பார்த்து வளர்த்துக்கோங்க, நம்ம ஜம்பை பகுதியைச் சேர்ந்த பையன் கரூரில் போய் இறந்து இருக்கான். விளையாட்டு புத்தியா போயர போறாங்க. அப்படிப்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். நேரா பிளைட்ல வருவாங்க. கார்ல வருவாங்க, பஸ்ல வருவாங்க டாட்டா காட்டிட்டே போயிடுவாங்க . அவங்க மேல முட்ட கூட முடியாது.

நம்ம செங்கோட்டையன் கூட அங்க போய் சேர்ந்தார். அவரு ரெண்டு டைம் தான் பார்க்க முடிஞ்சுதாம். அதுக்கு மேல அவரால பாக்கவே முடியலையாம்.ஆனா நம்ம எடப்பாடியார் ஞாயிற்றுக்கிழமை போனா சேலத்திலயோ,‌ இல்லைனா சிலுவம்பாளையத்தில் இருப்பாரு, இந்த அக்கா ஓட போய் எங்க பகுதியில் தண்ணி வரலேன்னு சொல்லி ஒரு துண்டு சீட்ல கொடுத்தா கூட போதும், ஒரே வாரத்தில் தண்ணி வந்துரும். அந்த மாதிரி முதலமைச்சர் நம்ம எடப்பாடியார். கல்விக்கடன் விவசாய கடன் தள்ளுபடி பண்ணியிருக்கிறார் என பேசினார்.

இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share