“தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!
தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால் அவருக்கு கொடி காட்டுகின்றனர், அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி அதிமுகவை விமர்சிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடி பகுதியில் தொகுதி மேம்பாடு சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், "அதிமுகவில் சேர்க்க முடியாது என சொன்னதற்காக டிடிவி தினகரன் எங்களை விமர்சிக்கிறார். எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் தவெக உறுப்பினர்கள் தான் கொடியை காட்டினார்கள். உண்மையிலேயே விஜயின் தொண்டர்கள் தான் எடப்பாடி பிரச்சாரத்தில் கொடி காட்டினார்கள்.
விஜய்க்காக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதற்காகவே அந்த உறுப்பினர்கள் கொடியை காட்டுகின்றனர். தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை விரும்புகிறார்கள்.
அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டோம். தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு இழி பிறவி அல்ல அதிமுக காரன். நாங்கள் அடுத்த கட்சியை மதிப்போம். ஆனால், அந்த கட்சியின் கொடியை பிடிக்க மாட்டோம். எங்களோடு கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தால் தூக்கி போட்டு மிதித்து விடுவோம். இது தான் அதிமுக தொண்டனின் வரலாறு. எங்கள் தலைவர்கள் ஒருவரை சாமி என்றால் அவர் எங்களுக்கும் சாமி, சாணி என்றால் சாணி.
தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல தான் தவெகவின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி தினகரன் அதிமுக குறித்து விமர்சிக்கிறார். சினிமாவிலும், அரசியலிலும் கொடி நாட்டிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். அவரை தவிர வேறு யாராலும் முடியாது. எம்.ஜி.ஆர் உடன் எவரையும் ஒப்பிட முடியாது. விஜய் எம்.ஜி.ஆர். மாதிரி தான். எம்.ஜி.ஆர். அல்ல.
இதையும் படிங்க: என்ன நடந்துச்சு? யார்கிட்ட வீடியோ இருக்கு? தவெக மா. செ.களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
விசிக வன்முறை இயக்கத்தோடு சேர்ந்து விட்டது. அவரது கட்சி தொண்டர்கள் அந்த வேகத்தை காட்டியிருப்பவர்கள். ஆனாலும் ஒரு கட்டுக்கோப்பு வேண்டும். விஜய் கட்சிக்கு கட்டுக்கோப்பு வேண்டும் என்று சொல்பவர், தன்னுடைய கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் திருமாவளவன் கண்டிக்க வேண்டும். சேர்ந்த இடம் அப்படி. திமுக எப்படியோ அப்படித்தான் விசிகவும் இருப்பார்கள்" என்றார்
இதையும் படிங்க: #BREAKING எதிர்பாராத திருப்பம்... கரூர் செல்ல தேதி குறித்த விஜய்... வெளியானது அதி முக்கிய அப்டேட்...!