இந்த அவமானம் தேவையா?... அசிங்கப்பட்ட செல்லூர் ராஜூ ... ஆசை ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்றாலும் நிகழ்ச்சிக்கு 30 பேர் கூட வரவில்லையே என ஆதங்கம்.
தனது தொகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்க நிகழ்வில் 50 இருக்கைகளும் காலியாக கிடந்ததால் அதில் பங்கேற்க சென்ற செல்லூர் ராஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி. மைக் பிடித்து பேச மறுத்துவிட்டு பெயரளவுக்கு 5 நிமிடம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வேக வேகமாக சென்றார். மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்றாலும் நிகழ்ச்சிக்கு 30 பேர் கூட வரவில்லையே என ஆதங்கம்.
மதுரையின் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு அதிமுகவின் சீனியர் அமைச்சராக இருந்தவர் மதுரையில் மாநகர அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் வைகை அணையில் தண்ணீர் வெப்பமாகுதல் தடுப்பதற்காக தெர்மாகோல் போட்டு வைகை மூடியது உலக அளவில் மிகப்பெரிய நகைச்சுவைக்கு உள்ளாக்கியது. அதிலிருந்து தெர்மாகோல் அமைச்சர் என நகைச்சுவையோடு இவரை அழைப்பது வழக்கம்.
தற்போது மதுரை மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செல்லூர் ராஜு மீண்டும் இதே தொகுதியில் களம் காண உள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் இவரது தொகுதியை குறிவைத்து தேர்தல் வேலையை வேகப்படுத்தி உள்ளனர் இதனால் செல்லு ராஜு கடந்த ஒரு வார காலமாக தொகுதிக்குள் ஆங்காங்கே வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்ஷன்...!
இந்நிலையில்தான் இவரது தொகுதிக்கு உட்பட்ட மதுரை காளவாசல் பகுதியில் உள்ள துரைசாமிபுரம் பகுதி குடியிருப்போர் நல சங்கத்தின் அலுவலக சுற்றுச்சூவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி கொடுப்பதாக மக்களை அழைக்கச் சொல்லி சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். நிகழ்ச்சி 11 மணிக்கு என சங்க நிர்வாகிகள் சங்கத்தில் உள்ள மக்களுக்கு தெரிவித்திருந்தனர்.
ஒரு மணிக்கு செல்லூர் ராஜு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார். ஆனால்11 மணியிலிருந்து சங்க நிர்வாகிகள் நான்கு பேரும் செய்தியாளர்கள் 15 நபர்களும் மட்டுமே இருந்தனர். இதனால் அங்கு போடப்பட்டிருந்த 50 இருக்கைகளும் காலியாகவே காணப்பட்டது. இதனை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த செல்லூர் ராஜு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வேகவேகமாக பூஜை நடத்த சொன்னார், நடத்தி முடித்த கையோடு வேகமாக காரை நோக்கி சென்றார். நிர்வாகிகள் செய்தியாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் என சொன்னவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேரளவுக்கு 5 நிமிடம் மட்டும் பேசிவிட்டு அமர்ந்தார். எதிரே இருக்கையில் யாரும் இல்லாததால் கோபமான செல்லூர் ராஜு நிர்வாகிகளை கடித்துக்கொண்டு மைக் பிடித்து பேசமாட்டேன், பேசினால் காலி இருக்கைகள் மத்தியில் செல்லூர் ராஜு உரை நிகழ்த்தினார் என செய்தி போடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என நிர்வாகிகளிடம் ரகசியமாக கூறிவிட்டு 5 நிமிடம் அமர்ந்து விட்டு பின்னர் வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!