×
 

இரவில் கமுக்கமாக நடந்த மீட்டிங்... டிடிவிக்கு நெருக்கமான முக்கிய புள்ளியுடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை...!

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான கோவையை சேர்ந்த ஆதரவாளர்கள் 

பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய அடுத்த நாளே அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 10 பேரின் கட்சி பதவிகளும், இருவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து விடுவித்தார்.

அதைத்தொடர்ந்து 9ம் தேதி முக்கிய நிகழ்வு உள்ளதாக 6ம் தேதி செங்கோட்டையன், அவருக்கு நெருக்கமானவர்களிடம் கூறிய போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 8ம் தேதி  டெல்லி சென்ற கே.ஏ.செங்கோட்டையன் அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து திரும்பினார்.

இதையும் படிங்க: எந்த துணிச்சலில் செங்கோட்டையனை சந்தித்தார்கள்? அமித்ஷாவுக்கு திருமா. கேள்வி

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் என .டி.ஏ கூட்டணியில் இணையத்தயார் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு கோவையை சேர்ந்த டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான இருவர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து தனியாக பேசி உள்ளனர்.

அதே போன்று டெல்லியில் அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தங்கி இருந்த செங்கோட்டையன், அவருடனே அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அப்போது முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு என பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் வருத்தமில்ல! நயினார் நல்ல நண்பர்.. மனம் திறந்த டிடிவி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share