"இப்படி பண்ண மிஸ்ஸே ஆகாது"... SIR படிவத்தை சரியா பூர்த்தி செய்ய தங்கமணி கொடுத்த சூப்பர் ஐடியா...!
இறந்தவர்கள் குடிமாறி சென்றவர்கள் வாக்குகளை கள்ள ஓட்டுகளாக போட முடியாமல் போய்விடும் என்பதால் தான் திமுக எஸ்ஐஆர் திட்டத்தை எதிர்க்கிறது.
இறந்தவர்கள் குடிமாறி சென்றவர்கள் வாக்குகளை கள்ள ஓட்டுகளாக போட முடியாமல் போய்விடும் என்பதால் தான் திமுக எஸ்ஐஆர் திட்டத்தை எதிர்க்கிறது. தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 174 தொகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அந்தக் கூட்டம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் கூட்டமாகும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர் என திருச்செங்கோட்டில் நடைபெற்ற பூத் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஊஞ்சபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பூத் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் அதிமுக கழக பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் பூத் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்டு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பாளையம் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 174 முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் பொறுப்பாளரும் அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கூறும் போது எஸ் ஐ ஆர் என சொல்லப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தம் அடுத்த மாதம் நான்காம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது. அதிகாரிகள் மூலம் வழங்கப்படக் கூடிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் திருத்த படிவங்கள் இரண்டு தான் வழங்குவார்கள். அதில் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டு நாம் கையெழுத்து இட்டு அவர்களிடம் வழங்கி விடுவோம். மற்றொன்று நம்மிடம் வழங்கி விடுவார்கள்.
அதை பூர்த்தி செய்வதற்கு முன்பு அதனை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து அந்த ஜெராக்ஸ் காப்பியை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் காண்பித்து சரிபார்த்த பின்பு, அந்த அதிகாரிகள் வழங்கிய படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள். இல்லையென்றால் தவறு எதும் ஏற்பட்டால் வாக்காளர் சிறப்பு திருத்த முறையில் அதில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
இந்தப் பூர்த்தி செய்யும் படிவத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நமக்கு பொருத்தவரை மிக மிக முக்கியம் இறந்தவர்கள் வெளியூருக்கு சென்றவர்களை நீக்கப்படாமலே இருந்து வந்தது. நாம் பலமுறை எழுதிக் கொடுத்தும் அந்த வாக்காளர்களில் நீக்காமல் இருந்து வந்தனர். தற்போது தேர்தல் ஆணையமே அந்தப் பணியினை செய்து கொண்டிருக்கின்றன. ஆகையால் அந்த பணிகள் நமக்கு எளிதாக இருக்கின்றது.
இதையும் படிங்க: இபிஎஸ் மேல பொறாமை படலாமா? ரொம்ப தப்பு! கடமை தவறிட்டாரு செங்கோட்டையன்! காமராஜ் விளக்கம்!